2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ் சக்தி தொலைக்காட்சி நிலையம் மூடுமாறு உத்தரவு;எதிராக மனுத்தாக்கல்

Super User   / 2010 ஜனவரி 08 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டிலுள்ள சக்தி தொலைக்காட்சி நிலைய ஒளி,ஒலி பரப்புச் செயற்பாட்டை நிறுத்துமாறு தொலைத்தொடர்பு ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக  எம்.ரீ.வி தொலைக்காட்சி நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

எம்.ரீ.வி தொலைக்காட்சி நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பிரதிவாதிகளாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா, அமைச்சின் செயலாளர், தொலைத்தொடர்பு ஆணைக்குழு, சுயாதீன தொலைக்காட்சி சேவை (ஐ.ரி.என்), சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

யாழ் குடாநாட்டிலுள்ள சக்தி தொலைக்காட்சி நிலைய ஒளி,ஒலி பரப்புச் செயற்பாட்டை நிறுத்துமாறு இந்த மாதம் 5ஆம் திகதி எம்.ரீ.வி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .