2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

நடுநிலைமையுடன் செயற்படுவதாக அமெரிக்கா வலியுறுத்தல்

Super User   / 2010 ஜனவரி 17 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலைமையுடன் செயற்படுவதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் நேற்று விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தலை விடுத்தது.

இந்த நிலையில், அமெரிக்கா ஒரு பக்கச்சார்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வன்மையாக கண்டிக்கப்படத்தக்கதெனவும் அமெரிக்கத் தூதரகம் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வன்முறைகள் எதுவுமின்றி தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும், உண்மையானதாகவும் நடைபெறவேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பமெனவும் அமெரிக்கத் தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

இந்தத் தேர்தலில் எந்தத் தரப்பினர் வெற்றிபெற்றாலும் , நீண்டகால உறவைப் பேணுவதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து பாடுபடுமெனக் கூறிய அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் ஜனநாயகம், சமாதானம் ஆகியவற்றைப் பேணும் நடவடிக்கையில் அமெரிக்கா தனது ஆதரவை வழங்குமெனவும் தெரிவித்தது.

இதேவேளை, எதிர்க்கட்சியின் பிரதான வேட்பாளருக்கு நிதியுதவி வழங்குவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கையிலுள்ள நோர்வேத் தூதரகம் நேற்று மறுத்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச,  எதிர்க்கட்சியின் பிரதான வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு நோர்வே நிதியுதவியளித்திருந்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .