2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சு.க.மக்கள் பிரிவு செயலாளர் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்

Super User   / 2010 ஜனவரி 22 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் பொதுச் செயலாளர் திரான் அலஸின் வீட்டின் மீது இன்று அதிகாலை கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலையடுத்து, அவரது வீட்டிற்கு தீ மூட்டப்பட்டதாகவும், எனினும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில், தனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில் உயிர் தப்பியதாக திரான் அலஸ் தெரிவித்தார்.

எனினும், இந்த கைக்குண்டுத் தாக்குதலில் திரான் அலஸின் வீடு மற்றும் வாகனமும் சேதமடைந்துள்ளன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .