2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

வடபிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்?

Super User   / 2010 ஜனவரி 25 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் லேவ்கே கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த நிமல் லேவ்கே,  கொழும்பிலிருந்து வடமாகாணத்திற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தான்  பணிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

தேர்தல்கள் இடம்பெறுகின்ற இச் சந்தர்ப்பத்தில் பொலிஸ் இடமாற்றம் செய்யப்படுவது தேர்தல் விதிகளுக்கு  முரணானது. எனினும், நிமல் லேவ்கே இடமாற்றம் செய்யப்படவில்லை எனவும், அவர் கொழும்பிலிருந்து தனது பணிகளைத் தொடருவதற்கு பணிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் திகதி அனைத்து அரசாங்க அலுவலகங்கள், நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள்  ஆகியவற்றில் பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவது, பதவி உயர்வு வழங்கப்படுவது, பணிக்கு அமர்த்துதல் போன்றவற்றை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளர்  உத்தரவிட்டிருந்தார்.      

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .