2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சுதந்திர தின விழாவை பகிஷ்கரிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்

Super User   / 2010 பெப்ரவரி 02 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள்,குறுக்கீடுகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி கண்டியில் இடம்பெறும் சுதந்திர விழாவை பகிஷ்கரிக்க தீர்மானித்துள்ளது.

தமது கட்சி இது குறித்து பொதுவான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார்.

மல்வத்தைய் மகா நாயக்க தேரோக்களை இன்று நன்பகல் சந்திதுப்பேசிய எதிர்க்கட்சியினர் தமது பகிஷ்கரிப்பு குறித்து விளக்கமளித்தனர்.

இச்சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்காவுடன் கரு ஜயசூரிய,காமினி ஜயவிக்கிரம பெரெரா,ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .