2021 ஜூன் 16, புதன்கிழமை

ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தி

Super User   / 2010 பெப்ரவரி 04 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மக்கள் அனைவரும் சமாதானமாகவும், பாதுகாப்பாகவும் வாழமுடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற 62வது சுதந்திர தின நிகழ்வில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

மக்கள் அச்சமின்றி நாட்டில் சுதந்திரமாக நடமாடமுடியும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். பேச்சுவார்த்தை மூலமாக அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார்.

தமிழ் மக்கள் தங்களது தாய்நாட்டை மறக்கவேண்டாமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் மஹிந்த ராஜபக்ஸ, அற்பமான அரசியல் இலாபங்களில் மக்கள் தவறாக செல்லக்கூடாதெனவும்  மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

இலங்கையில் 30 வருடகாலமாக நிலவிய  பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், நடைபெறும் முதலாவது சுதந்திரதின நிகழ்வு இதுவெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை மீளக்கட்டியெழுப்புவதாகவும் தனது சுதந்திர தின செய்தியில் உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .