2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்க மட்டு. மாநகரசபை முதல்வர் தீர்மானம்

Super User   / 2010 பெப்ரவரி 07 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்து இருக்க தீர்மானித்திருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் தான்  மீண்டும் இணைந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியானதாகவும்,  எனினும், அதில் உண்மை இல்லை எனவும் சிவகீதா பிரபாகரன் குறிப்பிட்டார்.

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவைப்போன்று, தானும்  கட்சியிலிருந்து கொண்டு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்ததாகவும் சிவகீதா பிரபாகரன் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .