2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கை - ரஷ்ய ஜனாதிபதி கலந்துரையாடல்

Super User   / 2010 பெப்ரவரி 09 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று மாலை ரஷ்ய ஜனாதிபதி டிமித்திரி மெட்வடேவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவது தொடர்பிலும், இலங்கைக்கான ரஷ்யாவின் பொருளாதார உதவி தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை, ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கும் ஒப்பந்தத்தில் இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டிருப்பதாக ரஷ்யாவின் பிரதி நிதி அமைச்சர் டிமித்திரி பான்கின் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .