2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்த ராஜபக்ஸ - ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

Super User   / 2010 பெப்ரவரி 12 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கும் முகமாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கு அனுமதியளிக்குமாறு ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க டெயிலிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது என மஹிந்த ராஜபக்ஸவிடம்   சுட்டிக்காட்டியிருந்த ரணில் விக்கிரமசிங்க, அவரை உடனடியாக விடுவிக்குமாறும்  வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை தான் சந்திக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்திக்க  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .