2021 ஜூன் 16, புதன்கிழமை

திடீர் கைது;ஜே.வி.பி அச்சம்

Super User   / 2010 பெப்ரவரி 12 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்தினால் கைதுசெய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருப்பதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி தமது சட்டத்தரணியுடன் இன்று கலந்துரையாடல்களை மேற்கொண்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் டெயிலிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என சில அரசாங்க அமைச்சர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைதுகள் தொடர்பான வாய்ப்புகள் அதிகரித்துச் செல்கின்றன எனவும், இவ்வாறானதோர் சூழ்நிலை ஏற்பட்டால் தமது கட்சி கொழும்பிலுள்ள தூதுவராலயங்களுக்கு தெரியப்படுத்தும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .