2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் அக்கறை

Super User   / 2010 பெப்ரவரி 14 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற தேசிய ரீதியிலான விசாரணைகள் குறித்து தனது மனித உரிமைகள் அலுவலகம் தெளிவாகவிருப்பதாக  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன்பிள்ளை  தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து தலைநகர் டப்பிளினில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றுகையில், அவர் இவ்வாறு கூறினார்.

எனினும், இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நவநீதன்பிள்ளை குறிப்பிட்டார்.

அண்மையில் இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்திருந்ததை உறுதிப்படுத்தியிருக்கும் நவநீதன்பிள்ளை, நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை அனைவரும் காத்திருப்பதுபோல் தெரிகிறதெனவும் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூனிற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பான்கீமூன் தீவிரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதியளிக்கப்படமாட்டாதென பி.பி.சி செய்திச்சேவைக்கு பேட்டியளித்திருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.

எனினும், சர்வதேச விசாரணைகளின்போது, சாட்சியமளிக்க இருப்பதாக ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .