2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கோர்டன் வைஸின் கருத்துக்கு அரசாங்கம் மறுப்பு

Super User   / 2010 பெப்ரவரி 14 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தவறான தகவல்களை பரப்பிவருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கோர்டன் வைஸ் வெளியிட்டுவரும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும்
தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் குலுகல்ல டெயிலிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலியாவிலுள்ள ஏ.பி.சி செய்திச்சேவைக்கு கோர்டன் வைஸ் பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .