2021 ஜூன் 14, திங்கட்கிழமை

தங்காலையில் ஜெனரல் பொன்சேகா ஆதரவு ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 பெப்ரவரி 14 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி, தென்பகுதி நகரான தங்காலையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பொலிஸார் கலைத்துள்ளனர். 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .

இன்று காலை 10 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். 

பொது இடங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில், 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .