2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு மாவட்டத்தில் போட்டி?

Super User   / 2010 பெப்ரவரி 15 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்  

தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா எமது தமிழ்மிரர் இணையதளத்துக்கு அளித்த விசேட பேட்டியில் தெரிவித்தார்.

வடக்கு,கிழக்கு மாகாணங்கள் உட்படதமிழ் பேசும் பிரதேசங்களில் முஸ்லிம் கங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிட ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும்,நாளை செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வேட்பாளர் தேர்வு இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தமிழ்மிரரின் கேள்விக்கு பதிலளித்த மாவை சேனாதிராசா தமது கட்சி முஸ்லிம் காங்கிரஸுடன் புரிந்துணர்வின் அடிப்படையில் இணைந்து போட்டியிடவுள்ளது என்று தெரிவித்தார்.

 

  Comments - 0

  • அமிா்தன் Monday, 15 February 2010 06:17 PM

    நல்லது உற்சாகமாக செயற்படுங்கள் வரவேற்கின்றோம்

    Reply : 0       0

    new move Monday, 15 February 2010 06:18 PM

    சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித உணர்வை ஏற்படுத்த இணைந்து சாத்வீகமாக போராடவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .