2021 ஜூன் 16, புதன்கிழமை

தனுன திலகரட்ன குறித்து தகவல் இல்லை- பொலீஸ் பேச்சாளர்

Super User   / 2010 பெப்ரவரி 16 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன எங்குள்ளார் என்று தெரியவில்லை என பொலீஸ்  பேச்சாளார் தெரிவித்துள்ளார்.

தனுன திலகரட்ன நாட்டை விட்டு வெளியேறியுள்ளாரா என்று எமது இணையதளம் கேட்டபோது, இது தொடர்பில்  எந்தவித தகவலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் பொலீஸ் பேச்சாளர் கூறினார்.

தனுன திலகரட்னவை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டிருப்பதாகவும் பிரசாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கு கொழும்பு நீதிமன்றம் நேற்று பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .