2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மதகுருமார்கள் அச்சுறுத்தப்பட்டதாக ரணில் குற்றச்சாட்டு

Super User   / 2010 பெப்ரவரி 19 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிலங்கையில் 500 பௌத்த விகாரைகளிலுள்ள   மதகுருமார்களுக்கு  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பௌத்த மதகுருமார்களின் விசேட மாநாடு இந்த மாதம் 18ஆம் திகதி நடைபெறவிருந்ததாகவும், பின்னர் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இந்த மாநாடு பிற்போடப்பட்டதாகவும் அவர் கூறினார். 

அரசாங்கத்தின் உதவியுடனையே இந்த மாநாடு நிறுத்தப்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார்.

அரசியலமப்புச் சபையின்  9வது உறுப்புரையின் படி, நாட்டில் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கவேண்டிய அதேவேளை, பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .