2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யானை சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானம்

Super User   / 2010 பெப்ரவரி 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணி யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மட்டக்களப்பு, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கான ஆசனங்கள் குறித்து இறுதி முடிவு எடுத்திருப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் நேற்றிரவு பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும், இதன்போது, கட்சி ஆசனங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கான வேட்புமனுத் தாக்கல் பத்திரத்தில் இன்னும் சில நாட்களில் கையொப்பமிடவுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .