2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அரசசார்பற்ற நிறுவனங்களிற்கு எதிராக விசாரணை-அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

Super User   / 2010 பெப்ரவரி 22 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்திற்கு எதிரான சதிமுயற்சிகளில் ஈடுபடும் அரசசார்பற்ற நிறுவனங்கள் விசாரணைகளின் பின்னர் தடை செய்யப்படும் என மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த ரிஷாத் பதியுதீன், இதற்கான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாகவும் கூறினார். சில அரசசார்பற்ற நிறுவனங்களை தாம் அடையாளம் கண்டிருப்பதாகவும், அரசாங்கத்திற்கு எதிரான  சதிமுயற்சிகளில் ஈடுபடும் அரசசார்பற்ற நிறுவனங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசசார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச அரசார்பற்ற நிறுவனங்கள் ஆகியன வெளிநாடுகளில் தவறான வழியில் நிதி சேகரித்து அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அண்மையில் உயர்மட்ட சந்திப்பின்போது குறிப்பிட்டிருந்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X