2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வாதாடவுள்ளார் ருத்திரகுமாரன்

Super User   / 2010 பெப்ரவரி 22 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவிரவாதிகள் எனப் பட்டியிலடப்பட்ட அமைப்புகளுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதைக்  கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில்; விஸ்வநாதன் ருத்திரகுமாரன் நாளை நேரில் ஆஜராகி வாதாடவுள்ளார்  இணையதள தகவல்கள் கூறுகின்றன.
மனிதாபிமான உதவிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தல் இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை தெளிவாக்கும்படி அவர் நீதிமன்றத்தில் வாதிடுவார் என்று, ஒரு இணையம் கூறுகின்றது.
அமெரிக்க வெளியுறவுத்துறையால் தீவிரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்ட இயக்கங்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது அந்நாட்டு தேசப்பற்றுச் சட்டத்தின்படி குற்றமாகும். இந்நிலையில், அதுதொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி ருத்திரகுமாரன் வாதாடவுள்ளார் என்றும், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வாதாடும் முதல் தமிழர் அவர் தான் என்றும் அந்த இணையதளங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .