2021 ஜூன் 14, திங்கட்கிழமை

தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கை வருகை? வெளிநாட்டமைச்சு நிராகரிப்பு

Super User   / 2010 பெப்ரவரி 24 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

கச்சதீவில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி வருகை தரவுள்ளார் என்ற செய்தியை இலங்கை வெளிநாட்டமைச்சு நிராகரித்துள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சர் கருணாநிதிக்கு யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இலங்கை அரசின் அனுமதிக்காக முதலமைச்சர் காத்திருப்பதாகவும் கூறப்பட்டது.இதுகுறித்து தமிழ் மிரர் இணையதளம் வெளிநாட்டமைச்சுடன் தொடர்புகொண்டபோது,உயர் அதிகாரியொருவர் இதனை நிராகரித்தார்.

இதேவேளை,இந்தச்செய்தி தொடர்பாக யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையுடன் தமிழ் மிரர் இணையதளம் தொடர்புகொண்டது.இந்தச்செய்திக்கு யாழ்.ஆண்டகைய் மறுப்புத்தெரிவித்தார்.

தம்மால் எவ்வித அழைப்பும் தமிழக முதல்வருக்கு விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .