2021 ஜூன் 16, புதன்கிழமை

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம்கள் சார்பில் இமாம்?

Super User   / 2010 பெப்ரவரி 25 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்டத்துக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சட்டத்தரணி ஆர்.எம்.இமாம் பிரேரிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்மிரர் இணையதளம் சற்று முன் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசாவுடன் இது குறித்து தொடர்புகொண்டது.இத்தகவலை மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தினார்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் சார்பில் கூட்டமைப்பு எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரையும் களத்தில் இறக்கவில்லை.
கூட்டமைப்பின் முன்னால் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற  உறுப்பினரான சட்டத்தரணி இமாம் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,தமிழ்மிரர் இணையதளம் சட்டத்தரணி இமாமிடம் இதுபற்றி விசாரித்தது.கூட்டமைப்பு தனக்குரிய இடத்தை வழங்கும் என்று சட்டத்தரணி இமாம் நம்பிக்கை வெளியிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .