2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கைக்கு எதிரான சர்ச்சையில் பிரிட்டிஷ் பிரதமரும் பங்கு

Super User   / 2010 பெப்ரவரி 25 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷ் பிரதமர் உலகளாவிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துள்ளார்.

இதன் மூலம், பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் உருவாக்கிய சர்ச்சையில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனும் இணைந்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக இலங்கை அரசாங்கத்தால் வர்ணிக்கப்பட்ட உலகளாவிய தமிழர் பேரவையின் மாநாடு நேற்று பிரிட்டனில்  நடைபெற்றது. இந்த மாநாட்டில்  டேவிட் மில்லிபான்ட் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதிகாரப் பகிர்வுடன் கூடியதான அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்த முன்வரவேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு, டேவிட் மில்லிபான்ட்   அழைப்பு விடுத்தார்.

பிரிட்டனிலுள்ள உலகளாவிய தமிழ் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றவிருப்பதை இலங்கை வெளிவிவகார செயலாளர் ரோஹித்த  போகொல்லாகம நேற்று கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .