2021 ஜூன் 19, சனிக்கிழமை

சவூதி அரேபிய தூதுவருடன் அமைச்சர் பீரிஸ் பேசவுள்ளார்

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜமீலா நஜ்முதீன்)

சவூதி அரேபியாவில் பணியாற்றிய இலங்கைப் பெண்ணொருவரின் உடலில் அரேபிய எஜமானர் 24 ஆணிகளை ஏற்றியமை தொடர்பாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கலந்துரையாடவுள்ளார்.

அப்பெண்ணின் உடலில் ஆணிகள் ஏற்றப்பட்டமை தொடர்பான மருத்துவ அறிக்கையை சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கையளிக்கவுள்ளது.

இதேவேளை, தேவையேற்பட்டால் மேற்படி சவூதி அரேபிய எஜமானருக்கு எதிராக சாட்சியமளிப்பதற்காக அப்பெண் சவூதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எல்.கே. ருஹுனுகே டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இதேவேளை, அப்பெண் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்ட ஆலோசனைகள் வழக்கப்படும் என நீதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .