2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

சவூதிக்கு ஆரியவதியை அனுப்பிய முகவர் நிலையத்தை தடை செய்வதற்கு தீர்மானம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவுக்கு  எல்.ரி.ஆரியவதியை பணிப்பெண்ணாக அனுப்பி வைத்த  முகவர் நிலையத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்வதற்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் விசாரணைகளை நடத்தியிருந்ததுடன், குறித்த முகவர் நிலையத்திற்கு எதிரான  முறைப்பாடுகளை எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற ஆரியவதியின் உடம்பினுள் ஆணிகளும் ஊசிகளும் ஏற்றப்பட்டிருந்தன. இதனையடுத்து இலங்கைக்கு திரும்பி வந்த ஆரியவதி, கடந்த வெள்ளிக்கிழமை 3 மணித்தியால சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவரது உடம்பினுள் இருந்த ஆணிகளும் ஊசிகளும் அகற்றப்பட்டன.   தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.
 


  Comments - 0

 • xlntgson Tuesday, 31 August 2010 08:58 PM

  குற்றச்சாட்டு என்ன? இந்த நிறுவனம் தெரிந்தே இவரை அப்படியான இடத்துக்கு அனுப்பியது என்பதற்கா, அல்லது இவ்வாறு அவருக்கு நடக்கிறது என்று தெரிந்தும் மௌனமாக இருந்துவிட்டார்கள் என்பதற்கா? பணிப்பெண் ஆரியவதி கொடுமை நடக்கிறது என்று இவர்களிடம் முறையிட்டு இருந்தாரா? அதை இந்த நிறுவனம் உதாசீனம் செய்ததா என்றும் தெரியவில்லை. அங்கே இருக்கும் வெளிநாட்டு தூதரக அதிகாரி/அலுவலர் எவரும் குற்றம் இழைக்கவில்லையா? சௌதியை ஓர் எதிரி நாடு போல் கருதவும் இயலாது, அவர்கள் நாட்டு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுவோம் என்று ஒப்பந்தம்!

  Reply : 0       0

  Saboor Adem Monday, 06 September 2010 06:49 PM

  இலங்கையில் உள்ள முகவர் நிறுவனத்துக்கு நடவடிக்கை எடுப்பதால் ஏதும் பெரிதாக நடக்கப்போவது இல்லை, மாறாக இலங்கைத் தூதரகத்தின் நிலைப்பாட்டையும் பரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதில்லை என்று இலங்கை அரசு தீர்மானம் எடுப்பதுடன் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து நடை முறைப்படுத்த வேண்டும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .