2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகர் மீது புகார்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.பி.செனரட்ன, ஆஸிக்)

தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து விட்டு ஏமாற்றியதாக பெண்மணியொருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, அரசியலில் பிரவேசித்துள்ள பிரபலமான நடிகர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு விட்டு பின்னர் அந்தப் பெண்ணை நடிகர் ஏமாற்றி விட்டுச் சென்றிருப்பதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நடிகர் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என குறித்த பெண்மணி கோரியபோது,  தன்னை அச்சுறுத்தியதுடன் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கும் மறுப்புத் தெரிவித்ததாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் தருமாறு கோரியபோதிலும், நடிகர் பொலிஸ் நிலையத்திற்கு செல்லத் தவறிய நிலையில், அவர் பொலிஸாரால் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .