2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

உயர்தரம் விஞ்ஞான பிரிவில் சித்தியடையும் மாணவர்களுக்கு தாதியர் வேலை - சுகாதார அமைச்சர்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

நாட்டின் அரச வைத்தியசாலைகளில் நிலவும் தாதிமார்களுக்கான தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக  க.பொ.த.(உ/த) விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத சகலரையும் தாதியர் சேவையில் இணைத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் மட்டும் 4,500பேர் தாதியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தாதியருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் கூறினார். அடுத்த மாதம் இன்னும் 15,000 தாதியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே அடிப்படை தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .