2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

கிருந்த துறைமுகத்திலுள்ள கடல் மணலை விற்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இந்திக்க ஸ்ரீஅரவிந்த)

கிருந்த துறைமுகத்திலுள்ள கடற்கரையோர மணலை மாலைதீவுக்கு விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கிருந்த துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்களின் பின்னர் கடலில் கழுவிச் செல்லப்பட்ட மணலே இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக  புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி என்.பி.விஜனாந்த தெரிவித்தார்.

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு கடற்கரையோர மணலை விற்பனை செய்வதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் முகமாக அமைச்சரவையிடம் மீன்பிடித்துறை அமைச்சு பத்திரமொன்றை கையளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், இவ்வாறு கடல் மண்ணை மாலைதீவுக்கு விற்பனை செய்வதால், துறைமுகத்திற்கு கப்பல்கள் நுழைய முடியாது எனவும் கவலை என்.பி.விஜனாந்த வெளியிட்டார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .