Super User / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளுர் பாலியல் இணையத்தளங்களை தடை செய்யுமாறு கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலான இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
'செப்டெம்பர் 9 ஆம் திகதி இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு நாம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதற்குமுன் நாம் குறிப்பிடப்பட்ட 107 இணையத் தளங்களையும் தடை செய்து விடுவோம்' என தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
உள்ளுர் ஆபாச திரைப்படங்கள் மற்றும் இணையத் தளங்களுக்குத் தடை விதிக்குமாறு பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு கடந்தவாரம் நீதிமன்றத்தைக் கோரியிருந்தது. அதையடுத்து 107 இணையத்தளங்களுக்குத் தடை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026