2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைத் தமிழ் அகதி தமிழகத்தில் கைது

Super User   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

50 இற்கு மேற்பட்ட இலங்கைத்  தமிழர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பத் திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டில் சென்னையிலுள்ள இலங்கைத் தமிழ் அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

38 வயதான சந்திரகாந்தன் என்பவர் தமிழகத்தின் பல்வேறு பாகங்களில் வசிக்கும் 50 இற்கும் அதிகமான இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக அவர்களை திருநெல்வேலிக்கு அருகிலுள்ள குற்றாலத்திற்குக் கொண்டுவந்தபோது நேற்று கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தமக்குக் கிடைத்த தகவலையடுத்து குற்றாலத்தில் விடுதியொன்றை சுற்றிவளைத்து தேடுதல்களை நடத்தினர். அப்போது 9 பெண்கள், 5 சிறார்கள் உட்பட 53 இலங்கைத் தமிழர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் சிலர் தமிழகத்திலுள்ள அகதிமுகாம்களில் தங்கிருப்பவர்கள் ஆவர். 23 பேர் அண்மையில் சுற்றுலா விசா மூலம் சென்னைக்கு வந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.  தம்மை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்வதற்கு தலா 3 லட்சம் இந்திய ரூபா வழங்குவதற்கு தாம்  உறுதியளித்ததாகவும் முற்கொடுப்பனவாக 10 ஆயிரம் ரூபா வழங்கியதாகவும் அவர்களில் சிலர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டக்கோவை மற்றும் வெளிநாட்டவர்கள் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .