2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

டெய்லி மிரர் ஊடகவியலாளர்களுடன் மேர்வின் சில்வா பேச மறுப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் செய்தி சேகரிப்புக்காகச் சென்ற டெய்லி மிரர் இணையத்தள  ஊடகவியலாளர்களுடன் முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பேச மறுத்துள்ளார்.  

மேர்வின் சில்வாவின் ஊடகப் பிரிவின் அழைப்புக்கு இணங்கவே  டெய்லி மிரர் இணையத்தள ஊடகவியலாளர்கள்  செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருந்தனர்.

களனியில் வசிப்பவர்களுக்கு உலர் உணவுப் பொருள்களை மேர்வின் சில்வா வழங்கியதுடன், கம்பஹா மாவட்டத்திலுள்ள தனது ஆதரவாளர்களையும்  மேர்வின் சில்வா சந்தித்தார்.

இந்நிலையில், டெய்லி மிரர் இணையத்தள ஊடகவியலாளர்கள் மேர்வின் சில்வாவை அணுகி சில கேள்விகளைக்  கேட்டனர். இதன்போது, நீங்கள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என மேர்வின் சில்வா கேள்வியெழுப்பினார்.

தாம் டெய்லி மிரர் இணையத்தளத்தைச் சேர்ந்த  ஊடகவியலாளர்கள் என  பதிலளித்தபோது, டெய்லி மிரரைச்  சேர்ந்த  ஊடகவியலாளர்கள் எவருடனும் தான் கதைக்க மாட்டேன் எனவும் மேர்வின் சில்வா கூறினார்.  

மீண்டும் டெய்லி மிரர் இணையத்தள ஊடகவியலாளர்கள் மேர்வின் சில்வாவை அணுகியபோது, இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் டெய்லி மிரர் இணையத்தள ஊடகவியலாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் மேர்வின் சில்வா கேட்டுக்கொண்டார். (DM) 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .