Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல்.மப்றூக்)
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு, நோன்புப் பெருநாள் தினமான எதிர்வரும் 10 ஆம் திகதி பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படவுள்ள கருத்தரங்கினை வேறு தினமொன்றுக்கு மாற்றும் படி, வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ள அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் பணி எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வினாத்தாள் திருத்தும் பணி தொடர்பான கருத்தரங்கொன்று எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு விசாகா வித்தியாலயம் மற்றும் றோயல் கல்லூரி என்பவற்றில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கருத்தரங்கு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தினமான எதிர்வரும் 10 ஆம் திகதியானது, முஸ்லிம் மக்களின் புனித நோன்புப் பெருநாள் தினமாகும். அதேவேளை, அன்றைய நாள் அரசாங்க விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு நோன்புப் பெருநாள் தினமான 10 ஆம் திகதியன்று மேற்படி கருத்தரங்கு நடத்தப்படுவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிவிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள், இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் உடனடி நடவடிக்கையினை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
ரமழான் மாதத்தின் 30 நாட்களும் நோன்பு நோற்கும் முஸ்லிம்கள் அதனைத் தொடர்ந்து வரும் நாளை புனித நோன்புப் பெருநாளாகக் கொண்டாடி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
7 hours ago