2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்திக்கான தடைகளை அகற்றவே அரசியலமைப்புத் திருத்தம்

Super User   / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சந்துன் ஏ. ஜெயசேகர)

அரசியலமைப்பு, சட்டங்கள் என்ற வகையில் அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தடையாக உள்ளவற்றை அகற்றவும் இன முரண்பாடுகளுக்கு  தீர்வை வழங்கும் வகையில் உறுதியான அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் அரசாங்கம் 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செய்யவுள்ளது என சுகாதார அமைச்ச்சரும் ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.  

இன்று மாலை மகாவலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன், 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு மேலாக தேர்தல் முறையிலும் மறுசீரமைப்புக்களை கொண்டுவரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

18ஆவது திருத்தம் பற்றிய கருத்தாடலுக்கு போதிய அவகாசம் அளிக்காமல் அவசரமாக கொண்டு வரப்படுகின்றது என்ற ஐக்கிய தேசிய கட்சியின் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், 1978 அரசியலமைப்பு, 13ஆவது திருத்தம் என்பவற்றுக்கு எவ்வளவு காலம் வழங்கப்பட்டது எனக் எனக் கேள்வி எழுப்பினார்.

மலேஷியா, சிங்கப்பூர், தென் கொரியா என்பன கடந்த சில தசாப்தத்தில் அபிவிருத்தியில் பெற்ற சாதனைகளுக்கு உறுதியான அரசாங்கமும்  தனியொரு தலைவரின் அல்லது கட்சியின் மாறாத கொள்கைகளுமே காரணம் என மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார். Pix by :- Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .