Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
காலி, கொழும்பு பகுதிகளில் திருட்டு , ஆட்கடத்தல் உட்பட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 3 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கரந்தெனிய, பொத்தல, ஹபராதுவ ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் கடவத்தை, பொரலஸ்கமுவ, பொத்தல, அக்மீமன ஆகிய இடங்களில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் பற்றி கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் தென்மாகாண விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
சந்தேக நபர்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் ஆகியவற்றை திருடி வந்தனர்.
இவர்களை விசாரித்துப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் களவுபோன பல மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன. தொடர்ந்து இவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இச்சந்தேக நபர்கள் காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டபோது, இவர்களை செப்டெம்பர் 23 வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார் என பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.ஜயக்கொடி கூறினார்.
27 minute ago
48 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
48 minute ago
3 hours ago