2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையர்களுக்கான அமெரிக்கப் பயிற்சித் திட்டம் இரத்து

Super User   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

3000 இலங்கையர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், வர்த்த சேவைகளை மூன்றாம் தரப்புக்கு வழங்குதல்- அவுட் சோர்ஸிங், கோல்சென்ரர் துறைகளில் பயிற்சியளிக்கும் திட்டத்தை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் (யூ.எஸ்.எயிட்) இடைநிறுத்தியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


மேற்படி பயிற்சித்திட்டத்தை எதிர்க்கும் அமெரிக்க குடியரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிம் பிஷப் இது தொடர்பாக கூறுகையில், இத்திட்டம் சிறந்த தொழில்களை அமெரிக்கத் தொழிலாளர்களிடமிருந்து எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கற்பிப்பதாகவுள்ளது என விமர்சித்துள்ளார.


இலங்கையில் இத்துறைகளிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு உதவுவதற்காக இத்திட்டத்திற்கு நிதியளிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருந்தது.
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தொழில்சார் தகவல்தொழில்நுட்ப மற்றம் ஆங்கில பயிற்சி நிலையங்களை நிறுவுவதற்காக முன்னிலை ஆங்கில மொழி பயிற்சி நிறுவனங்களுடன் தான் கூட்டிணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்தது.


இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதை நேற்று அறிக்கையொன்றின் மூலம் டிம் பிஷப் அறிவித்தார். இது தொடர்பாக யூ.எஸ்.எயிட் அதிகாரிகளிடம் உடனடியாக கருத்தைப் பெறுவதற்கு முடியவில்லை.

ஆனால் இத்திட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தின் பிரதியொன்றை பிஷப் வெளியிட்டார்.
இப்பயிற்சித்திட்டம் எந்தவொரு தொழில்வாய்ப்பையும் அமெரிக்கர்களிடமிருந்து அபகரிக்காது என்பதை உறுதிப்படுத்துவதற்கு தான் மீளாய்வு  ஒன்றை மேற்கொண்ட நிலையில் இத்திட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யூ.எஸ்.எயிட் அமைப்பு  கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .