Super User / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(
ஜமீலா நஜ்முதீன்)
18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்து குறித்து இலங்கையின் கவலையை அமெரிக்கத் தூதுவர் பட்ரிஷியா புட்டேனிஸ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவை அவர் இன்று காலை சந்தித்தார். அப்போதுஇ அமைச்சர் ரம்புக்வெலவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.ல். பீரிஸும் தெரிவித்த கருத்துகள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.ஷ
இச்சந்திப்பு குறித்து அமைச்சர் ரம்புக்வெல்ல டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவிக்கையில்இ அமெரிக்கா வெளியிட்ட கருத்து குறித்து தான் மீண்டுமொரு தடவை இலங்கையின் கரிசனையை வெளியிட்டதாகக் கூறினார்.
இலங்கையின் அரசியலமைப்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துவதாக கடந்த சனிக்கிழமை அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது.ஷ
இந்நிலையில் உள்நாட்டு விடயங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது எனவும் அமெரிக்கா முதலில் தனது சொந்தப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
22 minute ago
23 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
23 minute ago
27 minute ago