2021 ஜூன் 24, வியாழக்கிழமை

தமிழர்களிடையே ஒற்றுமையில்லை என்று காரணம் சொல்வதை ஜனாதிபதி மஹிந்த நிறுத்த வேண்டும்: மு.கருணாநிதி

Super User   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை என்று காரணம் சொல்வதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறுத்த வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி  தெரிவித்துள்ளார்

தமிழ் மக்கள் அமைதியான வாழ்க்கைச் சூழலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று திங்கட்கிழமை கூறியுள்ளார்.


'ஜனாதிபதி மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால் இலங்கைத் தமிழர்களின் கௌரவமான வாழ்க்கைக்கான அரசியலமைப்புத் திருத்தங்களை அவர் இலகுவாக நிறைவேற்ற முடியும்" எனவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது இலங்கை அரசாங்கத்தின் முன்னுள்ள முதல் பணியாகும் எனக்கூறியுள்ள கருணாநிதி, தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள பகுதிகளில் அதிகாரங்களை பரவலாக்குவதே அரசியல் தீர்வை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே பொருத்தமான தருணம் எனவும் இச்சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0

 • Vick Dharani Tuesday, 19 October 2010 10:47 AM

  போடா போடா புண்ணாக்கு

  Reply : 0       0

  xlntgson Tuesday, 19 October 2010 10:14 PM

  கருணாநிதி, மகிந்தவை குறை கூறும் முன் வெளிநாட்டு செயலர் நிருபமாவை கேட்டுக்கொண்டு சொல்லவேண்டும். அவரும் தமிழர்கள் எல்லோரும் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் தனித்தனியே வந்து எல்லாரும் ஒன்றையே கூறுகின்றார்கள். அவர்களது கோரிக்கைகள் ஒன்று போல் தான் இருக்கின்றன, ஏன் அவர்கள் ஒரே அணியின் கீழ் திரண்டு செயல்படக்கூடாது? என்று இதே இணையத்தில் நான் கண்டேன்; விமர்சித்தும்இருக்கின்றேன். மகிந்த கூறுவதில் தவறும்இல்லை இவர்கள் சண்டை பிடித்துக்கொண்டால் அதற்கு அவர் பழியும்இல்லை; உள்ளூர மகிழ்வடைந்தாலும் செய்யவழியில்லை, என்ன?

  Reply : 0       0

  Rohan Tuesday, 19 October 2010 10:37 PM

  காட்டி கொடுக்குற தமிழன் இருக்கும்வரை தமிழன் தலை தூக்க முடியாது.

  Reply : 0       0

  ram Wednesday, 20 October 2010 03:19 PM

  கருணாநிதி தன் நல வாதி......சும்மா ஒருத்தரும் நம்பதங்கோ

  Reply : 0       0

  xlntgson Wednesday, 20 October 2010 08:32 PM

  கருணாநிதி காட்டிக் கொடுக்கிறவரோ இல்லையோ அவருக்காகவும் கொஞ்சம் பேசுகின்றேனே, தமிழ்நாட்டில் கட்சிகள் ஒற்றுமையாக இருக்கின்றனவா, சிங்களக்கட்சிகள் தாம் ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றனவா, முஸ்லிம்கள் 10%இருக்கின்றார்கள்? அவர்களுக்கு எத்தனை கட்சிகள் இருக்கின்றன நாங்கள் ஒற்றுமையாகக்கூட ஓர் அரசியல் தீர்வு அவசியமானதாக இருக்கலாம் அல்லவா? நாம் அனைவரும் இலங்கையர் என்று கூறிக்கொண்டிருந்தால் போதாது நாங்கள் எத்தனை உண்மையான நண்பர்கள் எதிரணியிலும் கொண்டிருக்கின்றோம் என்பது முக்கியம் நாம் மாற்றாரோடு உறவு கொள்ளமுன்.

  Reply : 0       0

  vijayaraja alageson Thursday, 21 October 2010 01:06 AM

  மகிந்த ஜனாதிபதி சொன்னது முற்றிலும் உண்மை.
  கருணாநிதி போல பொய் புளுக வேணுமா. அவருக்கு தந்தி அடிக்க மட்டும்தான் தெரியும்.
  எல்லா தமிழனும் ஒற்றுமையாய் இருங்கடா என்று ஒவ்வொருதமிழனுக்கும் தந்தியா anuppanum

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .