Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 26 , மு.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கையில் ஏற்றுமதித்துறையில் ஈடுபட்டுள்ளவர்களில் 76 ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்குவிப்பு தொகையாக 496 மில்லியன்களை கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சு வழங்கியுள்ளது.
2008ஆம் ஆண்டு இந்த ஏற்றுமதியாளர்கள் பல்துறைகளிலும் குறிப்பாக ஏற்றுமதித்துறைக்கு பங்களிப்பு செய்ததை பாராட்டும் வகையில் இக்கொடுப்பனவை அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது இதனை வழங்கினார்.
ஜனாதிபதியின் விசேட பொருளாதார அபிவிருத்திக்கான செயலணியின் மூலம் கைத்தொழில், வர்த்தக மேம்பாட்டுக்கான ஊக்குவிப்பை முன்னெடுப்பதற்கான ஆலோசனையை ஜனாதிபதி வழங்கி வருகின்றார்.
தரமான ஏற்றுமதிச் சந்தை, சர்வதேச புதிய சந்தை வாய்ப்பு, பொருட்களுக்கான பெறுமதி பாதுகாப்பு, தொழிலாளர்களின் பாதுகாப்பு, தரமான பொருட்களின் மூலம் நிலையான சந்தை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கே இந்த ஊக்குவிப்பு வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago