Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 27 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் போராளிகளினால் வரையப்பட்ட சித்திரங்களின் கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கொழும்பு கலாபவனத்தில் இடம்பெறும் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரனசிங்க தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
முன்னாள் போராளிகளினால் வரையப்பட்ட 300 சித்திரங்கள் இக்கண்காட்சியின் போது காட்சிப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
கண்காட்சியின் இறுதியில் சித்திரங்கள் பெறுமதியான விலைக்கு விற்பனை செய்யப்படும் என சுதந்த ரனசிங்க மேலும் தெரிவித்தார்.
ஒற்றுமை, சமாதானம், புனர்வாழ்வு நிலைய அனுபவம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் போன்ற பல்வேறு தொனிப்பொருள்களில் புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் போராளிகளுக்கிடையில் நடத்தப்பட்ட சித்திர போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட சித்திரங்களே கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago