2021 ஜூலை 31, சனிக்கிழமை

எனது குறைகளை மன்னியுங்கள் : உபேக்ஷா

Super User   / 2011 மார்ச் 29 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எனது அரசியல் எதிர்காலம் குறித்து நான் ஒரு வருடகாலத்தில் தீர்மானிப்பேன். எனது குறைபாடுகளுக்காக  என்னை மன்னிக்குமாறு நான் பொதுமக்களை கோருகிறேன்' என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா ஸ்வர்ணமாலி கூறியுள்ளார்.

பபா என்ற பெயரில் பிரபலமான நடிகையான உபேக்ஷா ஸ்வர்ணமாலி நிட்டம்புவ, ஹொரகொல்லையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அண்மைக்காலத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்கும்வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் தான் உணர்ந்திருக்கவில்லை என அவர் கூறியுள்ளார். கட்சி அரசியலில் ஈடுபடுவது குறித்து தான் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .