2021 ஜூலை 29, வியாழக்கிழமை

இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு விஸா விதிகளை தளர்த்துகிறது தென்கொரியா

Super User   / 2011 மார்ச் 29 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கொரிய நீதியமைச்சு தெற்காசிய நாட்டவர்களுக்கான விஸா ஒழுங்கு விதிகளை தளர்த்தவுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி கொரியன் ஹெரால்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமைச்சின் தகவலின்படி, இத்திட்டத்தின் மூலம் நன்மையடைவுள்ள நாடுகளில் இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், வியட்நாம், பாகிஸ்தான், நேபாளம், லாவோஸ், இந்தோனேஷியா, இலங்கை, கம்போடியா, மியன்மார் ஆகியனவும் அடங்கும்.

இதுவரை சட்டவிரோத குடியேற்றம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக இந்நாடுகளுக்கான விசா ஒழுங்குவிதி சலுகைகள் இந்நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

'பெரும் எண்ணிக்கையான தெற்காசிய சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக புதிய விஸா ஒழுங்கு விதிகளை எதிர்பாரக்கிறோம் என  அமைச்சின் அதிகாரியொருவர்கூறியுள்ளர்.  கடந்த சில வருடங்களில் தெற்காசிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

'அத்துடன், தெற்காசியா உலகின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கை கொண்டுள்ளது. அது ஒரு சுற்றுலா மூலமாகும்' எனவும் அவர் கூறினார்.

இத்திட்டத்தின் மூலம் விசா பெறுவதற்கு நிதிநிலைமை, தொழில் அந்தஸ்து என்பனவற்றை நிரூபிப்பதற்காக குறைந்த ஆவணங்களே கோரப்படும் என அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .