2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கட்டாரில் இலங்கைப் பெண்ணுக்கு ஒரு வருட சிறை

Super User   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்புரிந்த இலங்கைப் பெண்ணொருவருக்கு 11,000 கட்டார் றியால்களை திருடிய குற்றச்சாட்டு காரணமாக ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அப்பெண் பணியாற்றிய வீட்டு எஜமானி கட்டார் பொலிஸாரிடம் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தனது கைப்பையிலிருந்து இப்பணத்தை பணிப்பெண் திருடியதாகவும் கடந்த வருடம் மார்ச் 6 ஆம் திகதி இச்சம்பவவம் நடைபெற்றதாகவும் இம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பணிப்பெண்ணின் அறையிலிருந்து 8000 றியால்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

39 வயதான இப்பணிப்பெண் குறித்த வீட்டில் தொழில்பெற்றுச்சென்று ஒருமாத காலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த பணிப்பெண் குப்பையிலிருந்து பணப்பையை கண்டெடுத்தாகவும் அவர் கூறினார்.

எனினும் வீட்டு உரிமையாளரின் முறைப்பாடு நம்பகமானது என கண்டறிந்த டோஹா நீதிமன்றம் மேற்படி பணிப்பெண்ணுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்ததுடன் தண்டனைமுடிந்தவுடன் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .