2021 ஜூலை 31, சனிக்கிழமை

உலகக் கிண்ண வெற்றி யுத்த வெற்றி போன்றது: பொன்சேகா

Super User   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் என தான் நம்புவதாகவும் அவ்வெற்றி யுத்தத்தில் பெற்ற வெற்றியை போன்றதாகும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்திலும் இலங்கை அணியினர் உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டுமென நாம் வாழ்த்துகிறோம் என பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஐ.தேக.வின் சார்பில் எதிர்க்கட்சி கொறடா ஜோன் அமரதுங்க இலங்கை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றதைப்போல் இம்முறையும் அதை வெல்வதற்கான ஆற்றலை  இலங்கை அணி கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .