2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

ரொபர்ட் பிளேக்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பிரதி செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் இலங்கைக்கான தனது விஜயத்தை ஒத்திவைத்துள்ளார்.

'வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்காவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையிலேயே ரொபர்ட் ஓ பிளேக்கின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கத்திடமிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது' என அமெரிக்க தூதரக அதிகாரியொருவர் கூறினார்.

அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .