2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

பொன்சேகா விவகாரம் குறித்து சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடம் முறையிடத் திட்டம்

Super User   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டமை மற்றும் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடம்  முறைப்பாடு செய்யவுள்ளதாக ஐ.தே.க. தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் கூடும்போது இது குறித்து முறையிடப்படும் என ஐ.தே.க.  பிரதி பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

சரத் பொன்சேகா, இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவரின் நாடாளுமன்ற ஆசனம் பறிக்கப்பட்டதன் மூலம் அவரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன என ஜயலத் ஜயவர்தன எம்.பி. கூறினார்.

ஏப்ரல் 15 ஆம் திகதி சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் மனித உரிமைககள் சபை சரத் பொன்சேகா குறித்து கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .