2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

பாரிய தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திர மோசடி கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

கொழும்பிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் உள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தில் 12 மில்லியன் ரூபா பெறுமதியான பண மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தில் மோசடியில் ஈடுபட்டதாக  தெரிவிக்கப்படும் இருவர் விசேட குற்றத்தடுப்புப் விசாரணை திணைக்கள பிரிவினரால் இரத்மலானையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறினார். இவர்களில் ஒருவர் இரத்மலானையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போலியான கடனட்டையைப் பயன்படுத்தி பண மோசடி செய்ய முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். 

இச்சந்தேக நபர்கள் கொழும்பிலுள்ள மூன்று முன்னணி வங்கிகளின் தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்திலிருந்து பெருந்தொகையான பணத்தை மோசடி செய்துள்ளனர். 11,896,600 ரூபா பண மோசடி இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. 

இந்த மோசடி குறித்து கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, நேஷன் ட்ரஸ்ட் வங்கி ஆகியவற்றின் முகாமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சந்தேக நபர்களுக்கு சர்வதேச ரீதியில் தொடர்பிருப்பதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .