2021 மே 14, வெள்ளிக்கிழமை

இலங்கைப் பணிப்பெண்ணின் சடலம் சிதைவடைந்த நிலையில் மீட்பு

Super User   / 2011 ஜூன் 18 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குவைத்தில் பகுதியளவில் சிதைவடைந்த  நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் சடலமொன்று தடவியல் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக  அல் வதான் எனும் அரபு தினசரி தெரிவித்துள்ளது. 30 வயதான இப்பணிப்பெண் உள் குருதிக் கசிவினால் இறந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரின் வீட்டிலிருந்து துர்மணம் வீசுவதாக அயலவர்கள் தகவல் கொடுத்ததால் அதிகாரிகளின் அனுமதி பெற்று பொலிஸார்  கதவை திறந்து பார்த்தபோது மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக  குவைத் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .