2021 மே 13, வியாழக்கிழமை

பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி பேணி வருகிறார் : அஸ்வர் எம்.பி.

Super User   / 2011 ஜூன் 21 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனித்து பேணிவருகிறார்  என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதமொன்றின்போது, உரையாற்றிய ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி., அல் கயீடா தலைவர் ஒசாமா பின் லாடனுடன் சேர்த்து அவரின்  குடும்பத்தினர் கொல்லப்பட்டதைப் போலல்லாமல், பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் கவனித்து பேணப்படுகின்றனர் என்றார்.

'இதுதான்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனிதாபிமானத் தன்மை' என அஸ்வர் எம்.பி கூறினார்.

இஸ்ரேலில் மனித உரிமைகள் மீறப்படுவதகாக ஐ.நா. அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்நிலைமையை சீராக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட இஸ்ரேலை இலங்கை பின்பற்ற வேண்டுமென ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

அவரின் கூற்றுக்கு பதிலளிக்கும்போதே ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்க்கட்சியினர் நாட்டுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பதாக கூறிய அவர், சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான ஆவணப்படத்தையும் விமர்சித்தார். அது புலம்பெயர்ந்த தமிழர்களின்  வேலை என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி: தமிழ்ச்செல்வனின் மனைவி என்பதற்கு பதிலாக பிரபாகரனின் மனைவி என்று கூறிவிட்டேன்: அஸ்வர் எம்.பி.


  Comments - 0

 • mubarak Thursday, 23 June 2011 03:20 AM

  thalaiwar nallawarthaan,, but
  துதி பாடுதலின் அளவுக்கு எல்லையே இல்லையா?
  தெஹிவலையில் பள்ளியை மூடிவிட்டார்களாமே தெர்யுமா?

  Reply : 0       0

  faris Thursday, 23 June 2011 04:26 PM

  முதலில் பாதிய மாவத்த பள்ளி விவகாரத்தை பாருங்க ..........

  Reply : 0       0

  Jeewan Wednesday, 22 June 2011 05:08 AM

  என்ன................?

  Reply : 0       0

  Hot water Wednesday, 22 June 2011 05:54 AM

  ஒண்ணுமே புரியல உலகத்தில...

  Reply : 0       0

  Sarath Wednesday, 22 June 2011 07:27 AM

  இலங்கை ஜனாதிபதி இதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இரிக்கிறார்... அனால் இதை செய்வதற்கான சந்தர்பம் அவருக்கு கிடைக்காதே...

  Reply : 0       0

  Ravi Wednesday, 22 June 2011 10:47 AM

  mental வருத்தம்

  Reply : 0       0

  நளீம் Wednesday, 22 June 2011 04:20 PM

  அஸ்வர் ஐயா சொன்னதை நம்ப முடியுமா? நம்ம ஐயா AC/DC கரன்ட் மாதிரி. ஒருநாள் மீன்டும் பச்சை வயல் பக்கமும் உலா வரலாம்ங்க

  Reply : 0       0

  Nesan Wednesday, 22 June 2011 05:49 PM

  பிரபாகரனின் மனைவி, பிள்ளைகளை ஜனாதிபதி பராமரிக்கிறாரா இல்லையா என்பது இருக்கட்டும். ஆனால் ஒசாமாவின் மனைகளில் ஒருவரும் மகன்களில் ஒருவரும்தானே கொல்லப்பட்டார். அந்த வீட்டிலிருந்து அவரின் ஏனைய மனைவிகள் பிள்ளைகள் உட்பட 18 பேர் அமெரிக்கப்படையினரால் அங்கேயே விட்டுச்செல்லப்பட்டனரே.

  Reply : 0       0

  VIRAJ Wednesday, 22 June 2011 05:58 PM

  சொல்லும் பொய்களுக்கு அளவே கிடையாதா?

  Reply : 0       0

  Ahamed Junaid Wednesday, 22 June 2011 06:26 PM

  பச்சை பக்கம் ஒரு கதை, நீல பக்கம் ஒரு கதை உங்கள் கதையில் எதை நம்புவது ஐயா?

  Reply : 0       0

  bis Wednesday, 22 June 2011 07:55 PM

  நன்றியுள்ள (தற்போது தின்னத் தருபவனுக்கு) .........??

  Reply : 0       0

  roshan raz Wednesday, 22 June 2011 09:34 PM

  .... உல்டாவுக்கும் அளவில்லையா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .