2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சாவுடன் தமிழகத்தில் இருவர் கைது

Super User   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கஞ்சா, புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக தமிழக பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

சந்கேத்திற்கிடமான மீன்பிடிப்படகொன்றை சோதனையிட்டபோது அதிலிருந்து 5 கஞ்சா பைகள், இரு புகையிலைப் பைகள், 8 பை மூக்குத்தூள் என்பன கைப்பற்றப்பட்டாக தமிழக கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றை கொண்டுசெல்வதற்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் வான் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .