2021 ஜூன் 16, புதன்கிழமை

2011 ஆண்டுக்கான கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த பிரிட்டன் எதிர்ப்பு

Super User   / 2009 நவம்பர் 27 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய காலனித்துவ நாடுகளின் 53 தலைவர்கள் இன்று முதல் ஆரம்பமாகும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான டிரினிடாட்-டுபேக்கோவில் கூடுகின்றனர்.

2011ஆம் ஆண்டில்  கொமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.இம்மாநாட்டை ஏற்று நடத்துவதற்காக விண்ணப்பித்துள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

இலங்கைக்கு இந்த கௌரவத்தை வழங்கக்கூடாது என்பதில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் அதிக கரிசனை காட்டுகின்றமை இவ்வார காலனித்துவ நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த கால யுத்தத்தை இலங்கை நடத்திய முறையும்,தற்போது அகதிகள் விவகாரத்தில் நடந்துகொள்ளும் முறையும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .