2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

பேரறிவாளன் வாக்குமூலம் திருத்தம்; சி.பி.ஐ அதிகாரியிடம் விசாரணை நடத்துமாறு மனு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்தியதாகக் கூறிய சி.பி.ஐ முன்னாள் அதிகாரி தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனிடம் விசாரணை காலத்தின் போது வாக்குமூலம் பெற்ற தியாராஜன், அந்த வாக்குமூலத்தை திருத்தியதாக அண்மையில் கூறியிருந்தார்.

இதையடுத்து வழக்குரைஞர் துரை செல்வம் இன்று தடா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரறிவாளனின் வாக்குமூலத்தில் குண்டு வெடிக்கப் பயன்படுத்தப்பட்ட பேட்டரியை ஏன் வாங்கி வரச் சொன்னார்கள் என்று தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறினார்.

ஆனால், தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை தியாகராஜன் வாக்குமூலத்தில் சேர்க்காமல் திருத்தம் செய்துள்ளார். இதனை அவரே தெரிவித்துள்ளார். எனவே, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். தடா நீதிமன்ற நீதிபதி தியாகராஜனிடம் ரகசியமாக வாக்குமூலம் பெற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. (நக்கீரன்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .